பணமா உறவா
குடும்ப விழாவாம் அழைப்பிதழ்கள் பரவலாக அனைவருக்கும்..,
கொடுத்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஏழை தங்கைக்கும் ஒரு அழைப்பிதழ்...
எதிர்பார்த்த சுபதினம், தங்க நகைகளுடன் பட்டு சேலையில் மினுமினுப்பாக தோன்றிய பலரின் இடையில் சாதாரண உடையில் தங்கையும்...
பகட்டானவர்களை இறுக கட்டியணைத்து முதல் பந்தியில் விருந்து, தங்கைக்கோ பந்தியில் அமர சொல்லக்கூட அங்கு யாருமில்லை...
பைகள் நிறைய பலகாரங்களுடன் பகட்டானவர்கள் விடைபெறுகையில், கனத்த நெஞ்சுடன் தங்கையும் விடைபெறுகிறாள்..
உறவுகளுக்கு நடுவில் பகட்டு, பணமென்ற பாலத்தை கட்டியதும் யாரோ வினாவை மனதில் கொண்டவளாய்...