வானகம் அல்லது சொர்க்கம்

நிலையற்ற வாழ்வில் பொறுப்பாக வாழ்ந்தோர்
நிலைகொண்ட வாழ்வை அடையும் வழிகளது!
வாழ்ந்துவிட்ட வாழ்வினிலே பொழிந்தவிட்ட கருணைக்கு
வந்தருள பலனாக வாய்த்துவிட்ட கோட்டையது!
சுயநலத்தின் சூத்திரத்தை உடைத்தெறிந்து வாழ்ந்தவரை
சொந்தமாக்க ஆவியை அழைத்துவிடும் உடலது!

தேம்பவிட்ட மனத்தேரில் கண்ணீர்வெடி போட்டவரே
துணிச்சலுடன் சொல்கின்றேன் வானகத்தில் இடமில்லை!
உருவத்தில் பழங்களோ பேதமின்றி அவையிருக்கும்
உள்சுவையோ வேறிருக்கும் அவையேதும் உமக்கில்லை!
நினைத்தபடி காமத்தை காட்டும்விக்கும் வெறியர்களே
நரகத்தில் வீழ்வீரே கொடுமையிலே அதுகொடுந்தொல்லை!

மார்க்கத்தின் வழிவழியாய் மானமோடு வாழ்ந்தவரே
மன்னிப்பு கொடியோர்க்கு நீங்களே கேளுங்களேன்!
உருவத்தை வழிபட்டு உணர்வுக்குள் இல்லையென்றால்
உள்ளிருக்கும் பக்தியோ வீணென்று சொல்லுங்களேன்!
சொர்க்ககூட்டம் குறைந்திருந்து கொடியோர்கள் அதிகரித்ததனால்
கடவுளே!நரகங்கள் இன்னொன்று அமையுங்களேன்!

எழுதியவர் : (10-Sep-16, 8:40 am)
பார்வை : 55

மேலே