ஆன்மாவைப் பரிசுத்தமாக்கும் ஒலி
சக்தியானது ஒளி, ஒல, மதம் ஆகியவற்றில் இணைந்துள்ளது, ஆனால் செயல்பாடுகள் வேறுபட்டது. கண்களால் பார்ப்பதும் காதுகளால் கேட்பதற்கு இவ்விரு சக்திகளும் அவசியம். மனிதனின் மூளை வளர்ச்சிக்கு இவை இரண்டும் முக்கியம்.. ஓளியின் வேகத்;திற்கு ஈடு கொடுக்க ஒலியினால் முடியாது. ஒலிக்கும் ஒளியைப் போல் மதத்தில் முக்கிய இடமுண்டு. ஓம் என்ற பிரணவ மந்திரம் பிரபஞ்சத்தி;ன ஆரம்ப ஒலியாக இந்துமத தத்துவத்தில் கூறப்பட்டுள்ளது கிறிஸ்தவ மதத்திலும் இச் சொல் ஆமன் என் மருவி பாவிக்கப்படுகிறது. ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும் போது அதில்; புனிதத்துவம் உண்டு. மனிதனின் நாபியிலிருந்து அவ்வோசை உருவாகிறது.
இந்து மதக் கடவுள்களின் வடிவங்களும் ஒலியும்.
இந்து மதக் கடவுள்களுக்கும் ஒலிக்கும் வாத்திய கருவிகள் மூலம் தொடர்பிருப்பதை காணக் கூடியதாகவிருக்கிறது. “டமருகம்” அல்லது உடுக்கையுடன் சிவன் , புல்லாங்குழலுடன் கண்ணன் , கையில் வீணையுடன் சரஸ்வதியும், நாரதரும் . மிருதங்கத்தடன் நந்தி , கையில் சங்குடன் விஷ்ணு, இப்படி ஒலிக்கும் இந்து மதத்திற்கும் இசைவடிவில் இணைப்பு இருப்பதை அறியலாம். பிரபஞ்ச நடனமாடும் நிலையில் சிவன் கையில் உள்ள உடுக்கை பிரபஞ்ச ஓசையை உண்டு பண்ண வல்லது. சிவன் நாதபிரம்மம் எனப்படுகிறார். ஓசை, ஒலி எல்லாவற்றையும் உருவாக்கியவர் அவரே. அத்தகைய நாதம் விந்துவின் நிலையைப் பெற்றறுள்ளது. பிரபஞ்ச பெரும் வெடிப்பின போது நாதம் உருவாகிற்று. பிரபஞசத்தின் இயக்கத்திற்கு நாதம் அவசியம். நாதத்தை நிறுத்திவிட்டால் பிரபஞ்சம் ஒடுங்கி விடுகிறது. நம்முள் இருந்து தோன்றும் நாதத்தை முறையாக கையாளுவது இறைவன் வணக்கமாகிறது. மூச்சு விடும் போது கூட ஒலி உருவாகிறது. அவ்வொலியின் அதிர் வெண் மூச்சு விடும் விதத்தில் தங்கியுள்ளது. அமைதியாக தியான நிலையில் இருக்கும் போது சிலர் மூச்ச விடுவது கூட மற்றவர்கள் காதுகளுக்கு கேட்காது. அதனால் சக்தி விரயமாவது குறைவாகிறது. மனம் குவியப் படுகிறது. மனம் பதட்ட நிலையடையும் போதோ, அல்லது கோபம் வரும் போதோ சாந்தப் படுத்துவதற்கு மந்திர உச்சரிப்புகள் உதவுகின்றன என்கிறார்கள் இந்து மதவாதிகள். குழந்தை பிறக்கும் போது அழுகை மூலம் ஓசையுடன் பிறக்கிறது. இது போன்றே பிரபஞ்சம் உருவாகும் போதும் ஓம் என்ற ஓசையுடன் உருவாகியது என்கிறது வேதம். மனிதன் வாழும் போது ஓசையுடன் கலந்து வாழ்கிறான். அவன் இறந்தவுடன் அவனுள் உள்ள ஓசை அடங்கி விடுகிறது.
ஒலி அலைகள்
20 HZ முதல் 20,000Hz அதிர்வெண்களை உடைய ஒலி அலைகள் சதாரண மனிதனின் காதுகளுக்குக்கேட்டகக் கூடியவை. ஒலி அலைகளின் சத்தியானது ஒளி அலைகளைப் போல் அலடலாது வேற்றிடத்தினூடாக செல்ல முடியாததொன்று. ஆகையால் அதனை அதனை இயந்திர சார் அலைகள் ( Mechanical Waves) என்பர். இது போன்றதே கடல் அலைகளும். ஒளி அலைகளை மின் காந்த அலைகள் என்பர். ஒலி அலைகள் சக்தியினைக் கொண்டது. மந்திரங்களை உச்சரிக்கும் போது வௌ;வேறு அதிர்வெண்களை உள்ளடக்கிய ஒலி அலைகள் உருவாகின்றன. இவ்வலைகள் எமது மனதுக்குள் நிம்மதியையும,; உடலுக்குள் உள்ள வியாதிகளைத் தீர்க்கவும் உதவுகிறது. மந்திரங்களை குறிப்பிட்டவாறு தொடர்நது உச்சரிப்பதினால் இப்பயனை அடையலாம் என்பது இந்துமதவாதிகள் கருத்து.
கருவும் ஒலியும்.
கருத்தரித்திருக்கும் பெண்ணுக்கு உள எழுச்சிகள் அதிகம். கருவில் இருக்கும் குழந்தையும், தாயின் உடல்மாற்றம் , மனதில் ஏற்படும் பாதிப்பால் தாக்கப்படுகிறது. கரு தரித்து 18ம் கிழமைக்குப் பின் குழந்தை ஓசையின் சக்தியை உணரக் கூடியதாகயிருக்கிறது. ஒலியானது வெளியிலிருந்து கருப்பைக்குள் இருக்கும் குழந்தையின் செவிகளை அடைந்தவுடன் அக் குழந்தையி;ன் இருதயத் துடிப்பிலும் மூச்சு விடும் விகிதத்திலும்; மாற்றம் ஏற்படுவதைக் கண்டுள்ளார்கள். காதுகளின் ஊடாக குழந்தை பெறும் ஓசை, அதன் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளையின் 60 விகிதமான மின் சக்தி ஓசையில் இருந்து பெறப்படுகிறது. குழந்தை பிறந்து ஆறு மாத காலத்துக்குள் ஓசையின் தொனிகளை அறியக் கூடியதாகயிருக்கிறது. ஆகவே கருவில் இருக்கும் குழந்தைக்கு தினமும் மந்திரங்கள் ஜெபிக்கபடின் அக்குழந்தையின் திடகாத்திரமான வளர்ச்சிக்கு உதவும் என்பதை வேதங்கள் கூறுகின்றன.. குழந்தை பிறந்து வளரும் போது அதன் பேச்சும், சங்கீதத்தில் ஆர்வமும் வளர்வதற்கும் இந்த முறை உதவுகிறது. ஊமைத் தாயின் கருவில் இருக்கும் குழந்தை தாயின் பேச்சினைக் கேளாது தவிக்கிறது.
இயற்கையும் ஒலியும்
இயற்கையில் தோன்றும் ஒலிகள் பலவிதம். ஓடும் நதி , அருவி, அலைகள், காற்றில் ஆடும் மூங்கில்களின் சப்தம் , பறைவகளினதும் மிருகங்களினதும, சில் வண்டு போன்ற பூச்சிகளினதும்; வௌ;வேறான ஓசைகள் , பெய்யும் மழை, அதோடு கூடிய இடி முழக்கம், மாரி காலத்தில் தவளைகளின் தாளவாத்தியக் கச்சேரி, இப்படி ஒவ்வொன்றும் வௌ;வேறான ஓசைகளை உருவாக்கின்றன. பறவைகள் உருவாக்கும் ஒலிகள் வௌ;வேறு அதிர் வெண்களை உடையவை. அதில் ஒரு தொனியும் வடிவமும் உண்டு. காதுகளுக்கு வாத்திய இசை போன்ற உணர்வை ஏற்படுதத் வல்லது. “உன்னால் மட்டுமே பாடமுடியும் என்று நினைக்காதே எம்மால் கூட போட்டியாகப் இசையை உருவாக்க முடியும்” என்று சவால் விடுவது போல் அவை இருக்கும்.. பறவைகள் , மிருகங்கள் , பூச்சிகள் எல்லாம் ஒலியை தோற்றுவித்து தமது துணைவி அல்லது துணைவணை அழைக்கின்றன. எதிரொலி இடமாக்கம் (Echolocation) முறையைப் பாவித்து வெளவால்களும் பாலூட்டிகளும் உறவாடிக்கொள்கின்றன. 2004ஆம் ஆண்டு இடம் பெற்ற சுனாமியின் போது இலங்கயில் தென்பகுதி கரையோரத்தில் உள்ள யால (Yala) வன பூங்காவில் வாழும் மிருகங்கள் பாதிக்கபடவில்லை. அதற்கு நுண்ணிய ஒலிகளை உணரக் கூடிய வல்லமை அவைகளுக்கு இருப்பதே காரணம். அதனால் பூகமபம்; ஏற்பட்டவுடன் அதனால் தோன்றும் அலைகளை உணர்ந்து வரப்போகும் சுனாமியில் இருந்து முதற்கொண்டே தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன.
பல மிருகங்கள், “நான் உன்னை அழைக்கிறேன்” அல்லது “என்னிடம் நீ அருகே வராதே” என்பது போல் அவை ஒலி மூலம் செய்திகளை அனுப்புவதாக ஆராச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவை பெரும் பாலும் புணர்ச்சிக்காக விடும் அறை கூவலாகும். இரை தேடும் போது போட்டிகளை தவிர்க்க ஒலி உதவுகிறது. அதிகாலை நேரத்தை அவை தேர்ந்தெடுப்பதறகு பல காரணங்களை விஞ்ஞானிகள் காட்டியுள்ளார்கள். அடர்ந்த காட்டில் ஒலியானது ஒளியை விட செய்திகளை திறம்பட எடுத்துச் செல்கின்றன. அமைதியான காலைப் பொழுதின் வெப்ப நிலையில் ஒலியானது சக்தியை இழக்காது வெகு தூரம் செல்லக் கூடியது. அதிகாலையில் வேட்டையாடும் மிருகங்கள் மிகக் குறைவு. ஆகவே எழுப்பும் ஒலிகளை அறிந்து தங்களை தாக்கி இரையாக்காமல் இருக்க அந்த நேரத்தை தெரிந்தெடுத்து கீதம் பாடுகின்றன மிருகஙகளும் பறவைகளும். இவர்களின் ஓசையை வைத்தே இசைகளைப் பல இசைஞானிகள் உருவாக்கியிருக்கிறறர்கள். தியானம் செய்யும் போது அவ்வோசை பலரால் பாவிக்கப் படுகிறது. இரு பொருள்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதினால் ஓசை உருவாகிறது. அந்த அடிப்படையிலேயே ஜலதரங்கம் , மிருதங்கம் , கஞ்சீரா போன்ற கருவிகள் உருவாகின.
ஒலியின் மூன்று நிலைகள்
ஒலியை சப்த அனுசாதனம், அர்த்த அனுசாதனம் , பாவ அனுசாதனம் என மூன்று நிலையாக இந்து மதம் வகுத்துள்ளது. ஒலியின் அதிர்வுகளை உணர்வது சப்த அனுசாதனம். எல்லா அதிர்வுகளை மனிதனால் உணரமுடியாது. சிலர் ஒரு அதிர்வையும் உணரமுடியாத சகத்தியை இழந்த செவிடர்களாகிறார்கள். முதிர்ச்சி கூடும் போது சப்த அனுசாதனம் பாதிப்படைகிறது. காதால் கேட்ட ஒலியின் அதிர்வுகளை பிரித்து அடையாளம் கண்டு, மூளையானது விளங்கிக் கொள்வதை அர்த்த அனுசாதனம் என்பர். சிலர் வெகுவிரைவில் தொலை பேசியில் கேட்கும் குரலில் இருந்து எவரின் குரல் என்பதை அடையாளம் கண்டு கொள்வார்கள். சிலர் ஒரு குண்டூசி கிழே விழுந்தால் கூட அதன் ஓiசியலிருந்து அடையாளம் காணக்கூடியவர்கள். இசையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கின் அர்த்த அனுதானம் கூடிய அளவிலானது. ஓலியைக் கேட்டு அதனால் மகிழ்ச்சி , சோகம் , பயம் , கோபம் போன்ற உணர்ச்சிகள் தோன்றுகின்றன. இதனை பாவ அனுதானம் என்பர். இடியின் முழக்கத்தைக் கேட்டு பயந்து அலருகிறது குழந்தை. ஒப்பாரியின் ஓசையைக் கேட்டு மரணவீட்டில்; தம்மையறியாமலே கண்ணீர் வடிப்பார்கள் பலர். பொப் மியூசிக் ஓசையில் தம் நிலை மறந்து கூச்சலிட்டு மகிழ்ச்சியில் ஆடுபவர்களைக் கண்டுள்ளோம். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒலி ஊடுறுவுகிறது. அதற்காகவே மந்திரங்கள் உருவாக்கப்பட்டன.
தாவர வளர்ச்சியும் ஒலியும்.
மனிதர்களைப் போல் தாவரங்களும் ஒலியினால் வளர்ச்சி அடைகிறது என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அண்ணாமைலை இசைப் பல்கலைக்கழகத்தில் அராய்ச்சியின் போது நாதஸ்வர ஓசையினை வயல் வெளிகளில் பரவ விடின் விளைச்சல் அதிகமாகும் என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். எல்லா ஒலிகளும் வளர்ச்சியைக் கொடுக்காது. தாவரத்தில் உள்ள அமினேர் திரவகம் , புரோதம் போனறவையைப் பொறுத்து ஒலியின் அதிர்வெண் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அப்புரொதத்திற்கு பொருத்தமான ஒலியின கேட்பதினால் புரொதத்தி;ன் வளர்ச்சி விரைவடைகிறது. அமினோ திரவகம் புரொதச் சஙகிலியுடன்இணையமு; போது உருவாகும் ஒலியின் அதர்வெண்ணின் இரண்டு அல்லது மூன்று அல்லது நான்னு மடங்குள்ள அதிர்வேண்களைப் பாவித்து இசையை உருவாக்கி அத் தாவரத்தின் வளர்ச்சிக்கு உதவமுடியும். ஆகNh தாவரத்துக்கு தாவரம் இது வேறுபடும். தாவரத்தின் கலங்களுடன் ஒத்துப்போகக் கூடிய ஒலியே அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. நோய்வாய்பட்டு வாடிய நிலையில் உள்ள தாவரம் ஒன்றினை ஒலியின் சக்தியினால் மனிதனைப் போல் புத்துயிர் கொடுக்க முடியும். தக்காளி மரத்தை தாக்கும் “மொசெயிக் வைரஸ்” எனப்படும் தொற்று நோயைக் கூட ஒலியினால் அழிக்கமுடியும்.
சங்கநாதம்
விஷ்ணுவின் கையில் உள்ள சங்கானது ஐம்பூதங்களின் கலவை என்கிறது தத்துவம் சங்கநாதம் போருக்கும் , பூஜைக்கும் மக்களமான வைபவஙகளுக்கும் பாவிக்கபடுகிறத. காலபபோக்கில் மரணச் சடஙகுகளிலும் சங்கு ஊதி சேமக்களம் அடித்து ஊர்வலம் போவதை காண்கிறோம். சங்கில் இருந்து வெளி வரும் நாதம் ஒவ்வொரு சடங்கின் முக்கியத்துவத்தைப் பொறுத்தது. அருச்சினன் போரில் பாவித்த சங்கிறகு பெயர் தேவதத்த. பீஷ்மரும, கிருஷ்ணரும் மகாபாரத யுத்தத்தில் சஙகை ஊதி நடத்தினார்கள் என்கிறது மஹாபாரதம். திருவெம்பாவை காலத்திலிலும் சங்கநாதத்தைக் கேட்டிருக்கிறோம். பாண்டவர்களின் மகாசங்கான புவண்டரம் மிக சக்திவாய்;நத ஒலியினைக் கிளப்பி படைகளை அதிரவைத்தது என்கிறது மஹாபாரதம். பாரதியாரும் கண்ணதாசனும் தங்களது கவிதைகளில் சங்கநாதத்திற்கு முக்கிய இடம் கொடுத்துள்ளார்கள்.
திபெத்து நாட்டின் பாடும் கிண்ணங்கள்.
கி.மு 560 முதல் 489 காலத்திலிருந்த சாக்கியமுனி என்ற பௌத்த ஞானி காலத்தில் தோடறியதே தீபத்திய பாடும் கிண்ஙகள். இதிலிருந்து தோன்றமு; ஓலியானது தயானத்தின் போது மந்திரஙகளுக்குப் பதிலாகப் பாவிக்கப்பட்டது. இக்கிண்ணஙகளைப் பல வழதமாகப் பாவித்து உடம்பில் உள்ள நோய்களை குணப்படுத்த முடியும். கிண்ணத்திலிருந்து உருவாகும் ஒலியில் உடலைக் குளிப்பாட்டி நோய்களைத் தீர்ப்பது ஒரு வழி. பாடும் கிண்ணததை உடலின் ஒவ்வொரு பகுதிக்கு எடுத்துச்டசென்று, கிண்ணத்தில் இருந்து வெளியாகும் நாதத்தில் ஏற்படும் மாற்றத்தை அவதானித்து அதன் பின்னர் அப்பகுதிக்கு பொருத்தமான நாதத்தை, கிண்ணத்தில் தோற்றுவிப்பது இன்னொருவகையான முறையாகும்.
ஒலியானது மருத்துவம் , ஆன்மீகம் , கடலடி ஆராச்சி ஆகியவற்றிற்கு துணைபோகிறது.
மருத்துவத்தில் அல்டிரா சவுண்ட் (ருடவசய ளுழரனெ) என்ற ஒலிஅலைகள் பாவிக்கப்படுகிறது.
20 கிலோ ஹெரட்ஸ்சுக்கு மேற்பட்ட அலைகளை அல்டிரா சவுண்டு என்பர். மருத்துவர்களின் கழுத்தில் தொங்கும் “ஸ்டெதஸ்கோப” என்ற இருதயத் துடிப்பின் தொனியைச் சோதிக்கும் கருவியின் இயக்கமானது ஒலி அலைகளை கருவாகக் கொண்டது.
********