கவி பாரதி

பாரதத்தில் பிறந்த தீ
பாரினிலே சிறந்த தீ
பாட்டினிலே பறந்த தீ
அவர்தான் பாரதி
பார்வதி தோற்றுவித்த
சுப்பிரமணி அல்ல நீ
இலட்சுமி ஊற்றுவித்த
சுப்பிரமணி
கையில் வேல் கொண்டவனல்ல
கவியில் வாள் கொண்டவன்
பத்மாசூரனை அழிக்கப் பிறந்தவனல்ல
பரங்கியச்சூரனை அடக்கப் பிறந்தவன்
இன்னும்
பெண்ணடிமை கண்டு
வன்கோபம் கொண்டு
மண் அடியே எரிகின்ராரோ
புரட்சிக் கவி
அதன் தாக்கமோ
சூடானது புவி
முற்போக்கைக் காட்டிய தலைவா நீ
முண்டாசு கட்டிய கலைவாணி
அகத்தில் நெருப்புச்சட்டை
அங்கத்தில் கருப்புச்சட்டை
அணிந்தல்லவா வீசினாய்
மூடர்மீது கவிதைச்சாட்டை
விண்ணிலிருந்து வள்ளுவன் கைநழுவி
மண்ணில் விழுந்த எழுத்தாணியே
பெண்ணடிமை செய்வோரின்
தலையில் உன்
எழுத்தால் அடித்தாய் ஆணியே
உன் சிலைமீது தாண்டிய
காக்கைகூட குயிலாய் மாறும்
சாரீர ஏற்றத்தாழ்வு கொண்டு
உன் சிரம்மீது தீண்டிய
தென்றல்கூட புயலாக நேரும்
சமூக ஏற்றத்தாழ்வு கண்டு
அனைவருக்கும் தாய்ப்பால்
கொடுத்த தமிழ்த்தாய்
உனக்கு மட்டும்
தமிழ்ப்பால் கொடுத்தாள்
சிவச்சாமியின் பர்வதியல்ல நீ
சின்னச்சாமியின் பாரதி
இலசுமிக்குப் பிறந்த
இலட்சியக்கவி
குயில் பாட்டு பாடிய
குயில் நீ
பாமரன் குளிர்காயும்
வெயில் நீ
எமனே
எருமையால் முடியாதென்றோ
எரிமலையை
யானைகொண்டு வீழ்த்தினாய் ?
யானையே நீ சாய்த்தது
தமிழர்களின் ஏணியே
எட்டயபுரத்தில் பிறந்து
யாரும் எட்டாப்புகழ் பெற்றவனே
தமிழ் உலகின் கொற்றவனே
வாழ்த்துகிறேன் உன் புகழை
மகாகவியே வணங்குகிறேன்
உன் தமிழை ....