நம் நட்பின் நினைவுகள்

உனக்கும் எனக்குமான இடைவெளி
எப்போழுது ஆரம்பித்தது என்று தெரியவில்லை...
நானும் நீயும் கல்லூரி முதலாமாண்டில்
தோழிகளாக அறிமுகம் ஆனோம்
அப்போது நமக்குள் பெரிதாக எதுவும்
தோழமை புரிதல்கள் இல்லை
மாதங்கள் ஓடின போக போக பேசினோம்
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்
எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றோம் பார்பவர்கள் அனைவரும்
பொறாமை படும் வன்னம்
நம் நட்பு இருந்தது....
நாம் பேசாத விக்ஷயங்கள் இல்லை
விவாதிகாத தலைப்புகள் இல்லை
போகாத இடங்கள் இல்லை
ஒன்றாக கோவில்கள் சென்றோம்
திரை அரங்கிற்கு சென்றோம்
பார்த்த படங்களை எல்லாம்
ஒன்று விடாமல்
அக்கு வேறாக ஆனி வேறாக ஆராய்ந்தோம்....
படித்த விக்ஷயங்களை பகிர்ந்து கொண்டோம் ஒன்றாக உணவருந்தினோம்
நீ கல்லூரிக்கு வரவில்லை என்றால் என்னிடம் காரணம் கேட்டார்கள்
என் பொழுது போகவில்லை
நான் கல்லூரிக்கு வரவில்லை என்றாலும்
உனக்கும் இதே நிலைமை தான்...
ஒன்றாகவே சுற்றினோம் ஒன்றாகவே திரிந்தோம்.. பார்ப்பவர்கள் எல்லோரும்
நம்மை காதலர்கள் போல் ஒன்றாக இருக்கிறார்களே என்று எண்ணினர்
தோழிகளுக்குள் இது எப்படி சாத்தியம் என்று நம் நட்பை பார்த்து வியந்தனர்...
இது எல்லாம் நம் கல்லூரி காலம் முடியும் வரை தானோ...
அதன் பின் நமக்குள் சின்னதாக இடைவெளி உருவாகியது..
அவரவர் வழியில் சென்றோம்
காலங்கள் ஓடின முன்பு போல் ஒன்றாக சுற்ற முடியவில்லை எங்கும் செல்ல முடியவில்லை அவ்வளவு தானா நம் நட்பு என்று தோன்றியது...
நமக்குள் இடைவெளி அதிகரித்து கொண்டிருந்தது...
நான் உன்னிடம் பேசினாலும் முன்பு போல்
நீ என்னிடம் பேசவில்லை.
பெண்களின் நட்பு அதற்குள் சுருங்கி விடுகிறதோ எனக்குள் எழும் கேள்வி அலைகள்...
இல்லை நீ என்னிடம் இருந்து விலகி செல்கிறாயோ எதுவோ எனக்கு காரணம் புரியவில்லை...
நம் நட்பின் நினைவுகள் என்றும் என்னை விட்டு நீங்காது உனக்கும் அப்படியே என்று நம்புகிறேன்...
உனக்கும் எனக்குமான இடைவெளி எதனாலோ காரணம் புரியாமல் விழிக்கிறேன்...
அந்த இடைவெளியை வெறுக்கிறேன்
கூடிய சீக்கிரமே நம் நட்பு நம்மை சேர்க்கும்
என்று நம்புகிறேன் என் தோழியே..
அதுவரை உன் நட்பின் நினைவுகளுடன் நான்....

எழுதியவர் : கா. அம்பிகா (11-Sep-16, 1:47 pm)
பார்வை : 686

மேலே