கள்ளியின் நினைவலைகள்

செடிகள் பூ பறிக்க என்றால்
பலன் எதிர்பார்க்காமல் தியாகம் செய்யும்.
இவை எந்த செடிக்கும் விதிவிலக்கு இல்லை!
ஆனால் சில கள்ளிச்செடிகள்
முற்றத்தில் அலங்காரத்திற்கு வைக்கப்படுகின்றன!
விரைவில் அவை
கல்லெறிகளுக்கு உட்பட்டோ அல்லது
வெட்டுண்டோ கழிவுகளாய் அப்புறப்படுத்தப்படுகின்றன!
சில மனித வாழ்க்கையும் அப்படியே!
சொல்லிவைத்தால் போல
அப்படியே அமைந்துவிடுகின்றன!
வீட்டின் முற்றத்தில் இருக்கும் போது
கள்ளிச்செடி நினைக்கிறது
நான் இந்த வீட்டில் சிறந்தவன் என்று!
எஜமானும் அப்படித்தான்
சமூகத்துக்கு ஏற்றால் போல
நடிக்கத்தெரிந்தவன் என்பதால் தான்
கள்ளிச் செடி மீது வைத்திருப்பது
போலிப்பாசம் என்பதை
வெளிக்காட்டாமல் வாழ்ந்து வந்து விடுகிறான்.
ஆனால் உண்மைகள் அவ்வப்போது வெளிப்படுகின்றது
எஜமானின் அக்கறை
வேறு செடிகளில் என்பதை
கள்ளிச்செடி அவ்வப்போது அறிகிறது!
இருந்தும் தன்மீதும் எஜமான் மீதும் உள்ள நம்பிக்கையில்
கள்ளிச்செடி காலம் நகர்த்தி வருகின்றது.
எஜமானின் சுயரூபம் வெளிப்படும் நாள் வந்தது,
பலநாள் நடித்ததன் விளைவு நேரில் வெளிப்பட்டு நின்றது.
கள்ளிச்செடி இப்போது வீட்டில் இல்லை
குப்பை தொட்டியில் !
எஜமானுக்கு கள்ளிச்செடியின் வலி புரியவில்லை
புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை !
கடைசியாக கள்ளிச்செடி
வலிகளை மறைக்கத்தெரியாத
பீனிக்ஸ் பறவைபோல்
எஜமானின் போலிப்பாசம் அறியாத அப்பாவியாய்நெ
ருப்பில் சூடுபட்டு மண்ணோடு உக்கிப்போனது!
மனித வாழ்க்கையின் தார்ப்பரியம்
இவ்வாறு அமைந்துவிடுவதே நியதி!

எழுதியவர் : (13-Sep-16, 8:04 pm)
சேர்த்தது : அ ஜோண் பெல்கான்
பார்வை : 57

மேலே