உலக தம்பதியர் தினக் கவிதை

#தம்பதியர்_தினம் பற்றிய
#தரமான_கவிதை
#ஆக்கம்_கவிதை_ரசிகன்_குமரேசன்


#அன்று...

தம்பதியர்
குடும்ப நதியின்
இரு கரைகள்......!

உலகில்
உயிர் பெற்று நடமாடும்
அர்த்தநாரீஸ்வரர்....!

இல்வாழ்க்கை வண்டியை
இழுத்துச் செல்லும்
இரட்டை மாடுகள்... ..!

உறவு சிகரங்களில்
தம்பதிகள் சிகரமே
எவரெஸ்ட் சிகரம்.....!

குழந்தைப் பயிர்களை
விளைவிக்கும்
விவசாயிகள்...!

ஒருத்தனுக்கு
ஒருத்தியாக வாழ்ந்த
சிறகில்லாத புறாக்கள்....

#இன்று....

கணவன்
மனைவி என்றால்
'விட்டுக்கொடுத்து'
வாழ்ந்தார்கள்....
இன்றும் வாழ்கின்றார்கள்
கணவனை மனைவியும்
மனைவியைக் கணவனும்
'விட்டு விட்டே....!'

கணவன் மனைவி என்றால்
'கட்டிக்' கொள்வார்கள்
இவர்களோ இன்று
'வெட்டிக்' கொள்கிறார்கள்....

'அன்னியோன்யமாக'
வாழும் தம்பதிகளை விட
'அந்நியமாக' வாழ்கின்ற
தம்பதிகளே !
இன்று அதிகம்......

'நல்லக்காதலர்களை' விட
இன்று
இறப்பது என்னவோ 'கள்ளக்காதல்கள்' தான்.....!

காலையில்
கரும்பாய் இருந்தவளை
வீட்டு வேலைகளும்
பேருந்து நெரிசல்களும்
அலுவலக வேலைகளும்
கடித்துத் துப்பியதில்
'சக்கையாக' வந்து
விழுந்தாள் படுக்கையில்..
விழுந்தவள் மீது
எறும்பாய் ஊரினான் கணவன்
இயந்திரத் தனமாக.....!

#என்று....

அழிவுப் பட்டியலில் இருக்கும்
தம்பதியர் உறவை
எப்போது
மீட்டெடுக்கப் போகிறோம்...?

இரவில் செல்போனோடு
உரையாடாமல்
என்று
துணையோடு உரையாடப்
போகிறோம்...?

'அந்த நான்கு' பேருக்காக
தம்பதியராக வாழாமல்
எப்போது
நமக்காக வாழப்போகிறோம்..?

"உள்ளத்தால் சங்கமிக்க"
எல்லா உறவுகளாலும் முடியும்
ஆனால்
"உடலாலும் சங்கமிக்க"
தம்பதியர் உறவால்
மட்டுமே முடியும்....!!!

ஒரு ஆணின்......
தங்கை
அக்கா தாய் என்ற இடத்தை
யார் வேண்டுமானாலும்
நிரப்பலாம் ....
ஆனால்
"மனைவி " என்ற இடத்தை
மனைவியால் மட்டுமே
நிறைவு செய்ய முடியும்
அதுவேதான்
பெண்ணிற்கும்....!

பிள்ளைகளை
பெறுவதால் மட்டும்
தம்பதியராகி விட முடியாது..!. ஏனென்றால் ?
"டெஸ்ட்டியூப்" வழியாகக்கூட பிள்ளையைப் பெற முடியும்....!

இனிவரும் நாட்களில்
சிறந்த தம்பதியராக வாழ்வோம்..!!!
தம்பதியர் தினத்தைச்
சிறப்பாகக் கொண்டுவோம்...!!!

♥ அனைவருக்கும் தம்பதியர்
தின நல்வாழ்த்துகள் ♥

இவன்
கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (29-May-24, 2:56 pm)
பார்வை : 28

மேலே