விழியே கடிகாரம்

உன் விழிகள் தானடி
என் கவிகளின் பிறப்பிடம்
நீ பேசாது போகையில்
மவுனம் என் பேனாவிடம்
மண்டியிடுகிறதடி
உனது சாலையெங்கும்
மலர்த்தூவ வருடமெல்லாம்
வசந்தத்தை வேண்டும் மரங்கள்
இமைகளுக்குள் இருக்கும்
விழிகள் எனக்கான கடிகாராமாக மாறிப்போனது
நான் சுழற்றி விட்ட பம்பரமாய் உனது சிரிப்பின் வடடத்தில்
சுழல்கிறேன்
தாமதங்கள் வரவேற்கப்படுகின்றன
தனிமையில் நீயும் நானுமிருந்தால்..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (13-Sep-16, 7:28 pm)
Tanglish : vizhiye kadikaaram
பார்வை : 112

மேலே