நாமுத்துகுமாருக்கு கவியஞ்சலி
ஆனந்த யாழை மீட்டியவன்
ஆயுள் நின்று போனதே!
நெஞ்சில் தீட்டிய வண்ணங்கள்
கண்ணீர் துளியால் அழிகிறதே!
அழகே! அழகே! என்று
அனைத்தையும்
அழகுபடுத்தி காட்டியவன்
அமைதியாய் உறங்கிப் போனானே!
படுத்துறங்க நேரமின்றி
பட்டாம்பூச்சி விற்றவன்
பலரையும் தவிக்கவிட்டு
படுத்துறங்குகிறான் பாடையில்.
கனவில் சந்திக்க வராதே என்று
கட்டளையிட்டு வந்தவன்
எல்லோரையும் மறுத்துவிட்டு
எமனை மட்டும் அனுமதித்தானோ?
முத்து முத்தாய் பூத்த பூக்கள்
மலர் வளையம் ஆனதே!
கண்பேசிய வார்த்தைகள் எல்லாம் - இன்று
கண்ணீர் வழியே புரிகிறதே!.......