உன் புடவை தலைப்பே

வளரும் காலம்முதல்
எனது நேற்றைய வாழ்க்கை வரை
பாசத்தை, நேசத்தை,
அன்பைக் கொட்டி,
உரிமையை காட்டி,

உலகத்தை புரிய வைத்து
உன் புடவை தலைப்பே
எனக்கு உலகமென
என் அடிமனதின் ஆழம் வரை
பதிய வைத்து,

உயிரின் இறுதி அணு வரை
வேர் விட வைத்து,
என்னை செதுக்கி செதுக்கி,
சமூகத்தின் சிறந்த பிரஜையாக
வளர்த்து விட்ட நீ

இன்று........
திடீரென்று
எழுந்து லட்சக்கணக்கான உயிர்களை
கொள்ளை கொண்டு போகும்
சுனாமி பேரலை போல

பல அடி உயரத்தில்
படம் எடுத்து
உயிர் குடிக்கும்
மலைப் பாம்பு போல

பல்லாயிரம் கருந்தேள்கள்
என் மீது ஊர்ந்து
என்னை
பரலோகம் அனுப்ப
தயாராவது போல

எதற்காக இத்தனை
கோபத்துடன்
என்னை வெறுத்து ஒதுக்குகிறாய்??

எங்கு செல்வேன் நான்??
அப்படி இன்று நீ வெறுப்பதாக
இருந்தால்
எனக்கு நினைவு தெரியும்
காலம் முன்பே
வெறுத்து ஒதுக்கி இருக்கலாமே...

பத்து மாதம் வயிற்றில்
அடைகாத்த காலத்தை
மறக்க சொல்கிறாயா??

தப்பு ஏதும் செய்யாத
என்னை
தாயான நீயே
என்னை வெறுத்து விலக்கினால்

எந்த உலகம் என்னை
ஏற்றுக் கொள்ளும்???

எழுதியவர் : சாந்தி ராஜி (14-Sep-16, 10:20 pm)
Tanglish : un pudavai thalaipe
பார்வை : 199

மேலே