கவிதை பசி

கவிதை என்னும் பசி
தோன்றி விட்டது
எனக்கு!

எனவே
வார்த்தைகள் என்னும்
உணவினைக் கொண்டும்

மை என்னும் நீரைக்
கொண்டும் தீர்க்க நினைத்தன்
தீர்ந்தது!

பசியில்லை என்
வார்த்தைகளும்
மையும் தான்

முடியும் என்றுதான்
முற்றுப்புள்ளி வைக்க
முயன்றேன் ஆனால்
முடியவில்லை!

அப்போதுதான் தெரிந்தது
என் கவிதை
என்றும் தொடரும்
தொடர்ச்சி என்று...!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (14-Sep-16, 11:12 pm)
Tanglish : kavithai pasi
பார்வை : 81

மேலே