சக்தியற்ற பக்தியுடையவர்கள் புத்தியற்ற மடையர்கள்

என தருமை அன்பர்களே ! வாழ்க்கை என்பது இறைவனால் தொகுக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும் (Software) என்பதை மனிதர்களாகிய நாங்கள் கட்டாயமாக அறிந்துக்கொள்ள வேண்டும்.

நவீனயுகம் (Modern Era) என்பது உடலில் உயிரிருந்தும் இறந்து கிடக்கும் மனித இனம் என்றே தான் கூறமுடியும் ஏனெனில் ஆதிகாலத்தை விட இக்காலத்தில் தான் பாவங்கள் அதிகமாக அரங்கேறுகின்றன.

சொற்ப அறிவில் வியக்கும் மனிதன் பல விதமான கண்டுபிடிப்புக்களை உலகிற்கு அறிமுகம் செய்து வருகிறான் ஆனால் அழியும் மனிதனை விட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவன் இறைவன் ஒருவனே

மனிதன் என்பவன் வெறும் அற்பத்தின் சொற்ப விந்தால் படைக்கப்பட்டவன் என்பதை எவராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது ஏனெனில் அதுவே இறைவனின் ஆற்றலிலும் ஆற்றலாகும்.

வியக்கும் உலகில் வாழும் மனிதன் அறிவில் மங்கிக்கிடக்கிறான் ஏனெனில் மூட நம்பிக்கையில் தீவரமாக தனது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு உலகில் களியாட்டம் ஆடிவருகிறான்.

ஒவ்வொரு மதத்திலும் மனிதர்களுக்கு போதனைகள் செய்துவரும் மதத்தலைவர்களை தெய்வமாக சக மனிதர்கள் நினைத்துக்கொண்டு இறைவனுக்கு நிகராக அவர்களை நம்பிவிடுகிறார்கள்.

ஆனால் நிச்சயமாக அவ்வாறு நம்பிக்கைக்கொண்டு வாழ்பவர்கள் மடமையில் மூழ்கி பாவத்தில் கரையொதுங்கி தனக்கு தானே நாசத்தை ஏற்படுதிக்கொண்டவர்கள் தான் என்பதை மறந்திட முடியாது

“சிந்திக்க சில படிப்பினைகள் செயற்பட பல அறிவுரைகள்” என்ற கோட்பாட்டில் தத்தமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு பிறருக்கு எவ்வித துன்பங்களையும் ஏற்படுத்தாத வகையில் வாழவேண்டும்.

“சக்தியற்ற பக்தியுடையவர்கள் புத்தியற்ற மடையர்கள்” என்றே தான் கூறமுடியும் ஏனெனில் பக்தியின் பெயரில் பிழையான யுக்திகளைக் கையாளும் அறிவிலிகளாக வாழ்ந்து மடிந்து விடுகின்றனர்.

“உண்மைகள் பேசாது பொய்கள் உன்னை காக்காது தூய்மை தோற்காது நேர்மை எனும் வாய்மை என்றுமே ஜெய்க்கும்” என்ற வாசகங்கள் மனிதர்களை சரியான முறையில் வழிநடத்திச் செல்லும்.

வரிகள் :- அப்துல் ஹமீட்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (14-Sep-16, 10:09 pm)
பார்வை : 123

மேலே