தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் - 66 = 223

“வண்ண வண்ண பூமேலே
மெல்ல மெல்ல வா மயிலே
உன் சின்ன சின்ன கண்களினால்
என்னை கொள்ளையிட்டு போ மயிலே..!”

“சிங்க நடை போட்டுவந்து
சங்கதிகள் சொல்பவனே
அங்கத்தில் அமர்ந்துகிட்டு
அட்டகாசம் செய்பவனே..!”

சொந்தம் நமது பந்தமாகும்
அது வந்து வந்து சிந்து பாடும்

எட்டாத கனியைகூட
எட்டி பிடிப்பது காதலாகும் !

மோக வண்ண காட்டுக்குள்ளே
காமங்கள் தூதுபோகும்

வெண்பகல் வேளை வந்தால்
வேஷங்கள் கலைந்துபோகும்

கன்னம் ரெண்டும் காதல் பழம்
அதில் தேனெடுப்போம் தினம்

முத்தம்தான் காதலின் சொத்தாகும்
அதை மொத்தமாக பங்கிடுவோம்

வஞ்சிமகள் வாய் திறந்தால்
வசந்த கீதமாகும்

வாலிபன் நான் ரசிப்பேன்
ஜீவனுள்ள கீதங்களை..!

அங்கமொரு தங்கமாகும்
அதில் சுரப்பது இன்பமாகும்

மனதில் எந்த மாற்றமில்லை...
மன்னவா சூட வா மணமாலை..

எழுதியவர் : சாய்மாறன் (14-Sep-16, 9:30 pm)
பார்வை : 142

மேலே