பூட்டுவில் வெண்பா - 4

விரைந்தோடும் கட்டைவண்டி மெல்லவே போகும்
தரைமீதில் தானிகுதித் தாடும் - நுரையும்
மிதக்கும் கடலில் மெதுவாய்ப் படகும்
இதமாகச் செல்லும் ரயில் .

விரைந்தோடும் கட்டைவண்டி மெல்லவே போகும்
தரையிலோ டும்குலுங்கி தானி -நுரைபொங்கும்
வெண்கடலில் நாவாய் மிதந்தழ காய்ச்செல்லும்
தண்டவா ளத்தில் ரயில் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (14-Sep-16, 9:27 pm)
பார்வை : 52

மேலே