காவேரி கொடுத்த நீர்

====================
ஊடகங்களுக்கு பஞ்சமற்ற
சூடான செய்தி.
முகநூல் பகிர்ந்துகொள்ள
பரபரப்பான தகவல்
இயக்குனர்களுக்கு
புதிய வன்முறைக் காட்சிகளுக்கு
இலவச ஒத்திகை
எழுத்தாளனுக்கு
ஒரு சஞ்சிகைக்கு எழுதக்
கிடைத்த புதிய தொடர்
கவிஞனுக்கு புதிய கரு
எரிக்கப்பட்ட பேரூந்துகாரர்களுக்கு
இரட்டிப்புக் காப்புறுதி
மாணவர்களுக்கு
வரலாற்றுப் புத்தகத்தில்
புதிய சேர்க்கை
மாநிலங்களுக்கிடையே
உடைக்கப்பட்ட நல்லுறவு
பதுங்கும் அரசியல்வாதிகளுக்கு
அடுத்த தேர்தல் மேடையில்
தங்கள் ஆட்சிக்கு வந்ததும்
தீர்த்துவைக்கும் பிரச்சினை.
என்பதுமட்டுமன்றி
எப்போதும்போல
ஏழை விவசாயிகளை
ஏமாற்றாமல்சற்று கானல் நீரும்
கொடுத்துவிட்டது காவேரி
*மெய்யன் நடராஜ்