உன் சாயலில் கடவுள்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
உன் சாயலில்
நேற்று ஆறேழு
கடவுள்களை பார்த்தேன்..
*
நீ எழுதுவது
எல்லாமே கவிதை
நான் எழுதுவது
கடைசிவரை
கவிதை பிழை தான்..
*
தாவணியோடு
வந்து நிற்கிறாய்
இன்று தெருவெல்லாம்
கார்த்திகை தான்..
*
நீயிருக்கும் ஊரில் மட்டும்
காலை எழுந்ததும்
கவிதையடி சண்டைகள்..
*
சைக்கிளில்
உன் வீட்டை
கடக்கும்போது
சட்டென்று
எட்டிப்பார்கிறாய்
சைக்கிள் தேரானது..
*
கோபங்களில்
நகங்களை போல
வெட்டி எறிந்துவிட்டாய்..
மீண்டும் முளைப்பேன் அன்பே..
*
உன் வீடு முழுவதும்
இளையராஜா பாடல்களாகவே
நிறைந்திருக்குமோ?
எங்கிருந்து வருகிறது
உன் கண்களில் மட்டும்
இத்தனை காதல்..
*
தூரல் போடுது என்று
நீ சொன்னபோதே
தொடங்கி விட்டது
நமக்காக பெருமழை..
*
இம்மழையில்
நீ விடும்
பேப்பர் கப்பல் கூட
எனக்கு டைட்டானிக் தான்..
*
இம்மழையிருட்டில்
கவிதையும் இசையுமாய்
உன் மார்பு சூட்டோடு
கிடப்பதை விடவா
இம்மழை அழகாக
இருக்கப்போகிறது எனக்கு..
*
- கோபி சேகுவேரா