நமக்கே தெரியாத நண்பன்

நமக்கே தெரியாத நண்பன் (டைரி 2004)
=====================================
அன்னைக்கு காலையில ஒரு க்ளாஸ் காப்பி குடிச்சதும்
மேலும் உறங்கணும்போல இருந்தது
எங்க நம்ம பிரெண்ட்ஸ் உறங்க விடுவானுங்களா
பிறந்தநாள் ஆச்சே
வீட்ல எல்லோரும் நைட் பேசி முடிஞ்சாச்சு
கூட படிச்ச எல்லாரும் விடிய விடிய
கச்சேரி பாடியாச்சு
அஞ்சாறு கேக்குகளும் வாங்கி
போன் மேலே போன் போட்டு ஒரே கூப்பாடு
அங்க போயி அவங்களையும்
கூட்டிகிட்டு
மறுமலர்ச்சி விடுதிக்குப்போனோம்
ஒரு உண்மையை சொன்னா நம்பமாட்டிங்க
அன்னைக்கு காலையில
கண்ணாடி முன்ன நின்னு
என்னோட முகத்தை பார்த்தபோது
போன வருஷம் அதே பெப்ரவரி பதினாலு
நினைவுக்கு வந்துச்சு
அன்னைக்கு என்னோடிருந்தவங்களுக்கு
நினைவிருக்கான்னு தெரியல
பிறந்தநாள் முடிஞ்சு
எல்லோரும் பிரிந்து போனபோது
குடிச்சு முடிச்ச ஒரு ஃபாண்டாவினுடைய
காலி ஈயக்குப்பியினை
காலாலே எட்டி உதைச்சேன்
அது அந்த புற்றரையில் எதையோ
காத்திருக்கிற சிறுமி முன்னால போய் விழுந்தது
அவ அதை ஏக்கமா பார்த்திருந்தா
ஒருவேளை அந்த கண்ணாடியாகக் கூட இருக்கலாம்
எனக்கிதை காண்பித்துத் தந்தது
நாம் மறந்த காட்சிகளை காண்பித்துத் தந்த
அக்கண்ணாடி may be, he is our unknown friend
அன்னைய வாழ்க்கையில
அளவிடமுடியாத சந்தோஷத்தை
வாங்கித் தந்தது
அந்த நட்புதான் "கண்ணாடி"
நம்ம ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும்
அந்த வாழ்க்கையைப் பற்றிய
ஒரு முக்கிய தீர்மானம் எடுக்கும் முன்ன
நமக்கொரு நல்ல நண்பன் வேணும்
நமக்கு தெரியாமலேயே போன
நம்மளோட நண்பன் அதுதான் கண்ணாடி
அப்படித்தான் எனக்கு
என் அறையின் நிலைக்கண்ணாடி
நெரிசலுள்ள சாலையை கடக்க நேருகிறபோது
சமிக்கை இருத்தத்தில்
கார் கதவையும் ஜன்னலையும்
யாரோ வயிற்றைப் பிசைந்தபடி தட்டக்கூடும்
அப்போது நாம் உணர்விழந்திருப்போம்
பச்சை சமிக்கையை கடந்து
நம் பயணம் முன்னேறுகையில்
ஓரக்கண்ணாடி வழியே
நம்மில் எத்தனைப்பேர்
பின்னால் திரும்பிப் பார்த்திருப்போம்
இனிமேலாவது கடைப்பிடிக்கலாமா ம்ம்
அப்போதும் அந்த கண்ணாடிதான்
கருணை சொல்லிக் கொடுக்கும்
எத்தனையோ விதமான விகார முகங்களை
தாங்கிப் பழக்கப்பட்ட
எல்லோருடைய முதல் நண்பன்
கண்ணாடி
தாழ்வு மனப்பான்மையையே தரும்
சமூகத்தாருக்கு முன்னால்
சொற்ப உழி
தன்னம்பிக்கையை வளர்க்க
உதவுகிறது கண்ணாடி
இருக்கிறபோது ஒரு பிம்பம் காண்பிக்கும்
இடரி விழுகிற போதும்
காணுகிற இடம் தோறும்
ஒன்றை ஆயிரமாய் விசாலித்து அருளும்
வரப்பிரசாதம் கண்ணாடி
ஆம் அவன் இதுவரை
நமக்கே தெரியாத நண்பன் "கண்ணாடி"
பூக்காரன் கவிதைகள்