பிந்து சந்து பொந்து

ஏண்டா மகனே மணிமாறா, அடுத்த மாசம் எம் மருமக செம்பருத்திக்கு கொழந்தை பொறக்கப் போகுதுன்னு சொன்ன. உம் மாமியார் வீட்ல செம்பருத்தி நல்லா இருக்கறாளா?
#@@@@@

செம்பருத்தியை நல்லா பாத்துக்கறாங்க அம்மா. அவ நல்ல உடல் நலத்தோட இருக்கறாம்மா.
########
அந்தக் கொழந்தைக்கு என்ன பேரு வைக்கலாம்னு இருக்கறீங்க.
###########
நாங்க பெண் கொழந்தையா பொறக்கணும்னு ஆசைப்படறோம்மா. எங்க ஆசை நிறைவேறுச்சுனா கொழந்தைக்கு பிந்து-ன்னு பேரு வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கிறோம்.
@########
என்னடா மணிமாறா, ஆசையாப் பெத்துக்கற கொழந்தைக்கு பிந்து, சந்து, பொந்துன்னா பேரா வைக்கறது?
@@@@@@
இல்லம்மா, எங்கூட வேலை பாக்கற தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாம் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தான் வச்சிருக்கறாங்க. நா மட்டும் தமிழ்ப் பேர வச்சா அவுங்கெல்லாம் ஒரு மாதிரியாப் பேசுவாங்க.
@######
ஏண்டா மணிமாறா, மொழிப் பற்று இல்லாவங்க எல்லாம் தமிழ் ஆசிரியர்களாகவும், தமிழ்ப் பேராசிரியர்களாக இருப்பது தமிழை வளர்க்க இல்லடா; தமிழைச் சீரழிக்கத்தான். நீயாவது வித்தியாசமா இருடா. பத்தோட பதினொன்னா இருக்கறதவிட ஆயிரத்தில ஒருவனா இருடா. சரி பிந்து-ங்கற இந்திப் பேருக்கு என்னடா அர்த்தம்?
@@@@@@@
அம்மா பிந்து-ங்கற இந்திப் பேருக்கு புள்ளி, துளி -ன்னு ரண்டு அர்த்தம் இருக்குதம்மா.
@@####
ஏண்டா மணிமாறா பெரும்பாலான தமிழர்களுக்கு அர்த்தம் தெரியாத ஒரு இந்திப் பேர எஞ் செல்லப் பேத்திக்கு வைக்கறது உனக்குப் பெருமையா இருக்குதா? துளி, புள்ளி, இந்த இரண்டு அர்த்தில ஏதாவது எதாவது ஒண்ணை உங் கொழந்தைக்குப் பேரா வைக்கிறதுதானே.
@@#####
இல்லம்மா புள்ளி அல்லது துளி-ன்னு பேரு வச்சா எங் கூட வேலல பாக்கற தமிழ்ப் பேராசிரியர்களே என்னக் கிண்டல் பண்ணுவாங்களே!
@@@@@@@
அந்த தமிழ் சீரழிப்பாளர்களப் போல நீயும் இருக்காதடா மணிமாறா. நல்ல தமிழ்ப் பேர வைடா. உன்னப் பெத்த தாய்கூட உன்னோட மூச்சு நிக்கறவரைக்கும் உன்னோட இருக்கமாட்டாடா. ஆனா தாய் மொழி உன்னோட மூச்சு அடங்கும் வரை உன்னோடதாண்டா இருக்கும்.
@@@@@@@
நீங்க சொல்லறதுதாம்மா சரி. எங்க பொண்ணுக்கு குறிஞ்சி-ன்னு பேரு வச்சிடறேன். அந்தப் பேர யாராவது கொற சொன்னா அவுங்க மூக்க அருக்கற மாதிரி நறுக்குன்னு நாலு வார்த்தை சொன்னா வாலச் சுருட்டிக்குவாங்க அம்மா.
@#####
இப்பத்தாண்டா மகனே உனக்கு தமிழன்-ங்கற உணர்வே வருது.
######################################################
சிரிக்க அல்ல. சிந்திக்க. திரைத் தமிழை அழிப்போம். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உழைப்போம். பிற மொழிப் பெயர்களை நம் பிள்ளைகளுக்குச் சூட்டி நம் செம்மொழியை இழிவு செய்வதைத் தவிர்ப்போம்.
@@@@@@@@@@@@
நன்றி: இண்டிசைல்ட்நேம்ஸ்காம்.
@@@@@@@@@@@
மேலே நீங்கள் வாசித்த துணுக்கு தவறு என்றால் மின்னஞ்சலில் தெரிவியுங்கள். விலக்கி விடுகிறேன்.

எழுதியவர் : மலர் (18-Sep-16, 10:41 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 241

மேலே