பற்களை மிளிர செய்யும் வல்லாரைக்கீரை
ஞாபகசக்தியை கொடுப்பதில் வல்லாரைக்கீரைக்கு அசாத்தியமான பங்கு உண்டு. இவற்றை சமையலுக்கு பயன்படுத்தும் போது புளியை சேர்க்கக் கூடாது. புளி வல்லாரையின் சக்தியை குறைத்து விடும். உப்பையும் குறைவாகத்தான் சேர்க்க வேண்டும். வல்லாரையை நெய்விட்டு வதக்கி சிறிதளவு இஞ்சி, இரண்டு பூண்டு கீற்றுகள் சேர்த்து துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் வியாதிகள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு முதலியவை குணமாகும்.
பற்களில் பலருக்கும் மஞ்சள் உள்ளிட்ட வண்ணம் படிந்திருக்கும். இவற்றை போக்க வல்லாரையை பற்களின் மேல் வைத்து தேய்த்தால் போதும் நிறம் மாறுவதோடு, பற்களும் வெண்மையாக பளீரிடும். வல்லாரையை அளவோடு குறைந்த அளவுதான் உண்ண வேண்டும். அளவு மீறினால் மயக்கம் வரும். தலைசுற்றல் ஏற்படும். உடம்பை பிழிவதை போல வலி ஏற்படும்.
எனவே இக்கீரையை அடிக்கடி உண்ணாமல் பத்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதே நல்லது. நோய் தீர்க்கும் மருந்து: ரத்தத்தை சுத்தப்படுத்தும். மூளை பலப்படும். மாலைக்கண் நோய் நிவர்த்தியாகும். வலிப்பு நோய்களை கட்டுப்படுத்தும். மாரடைப்பை தடுக்கும். யானைக்கால் நோயை ஆரம்பத்திலேயே வராமல் தடுக்கும். பெண்களின் மாதாந்திர பிரச்னையைத் தீர்க்கும். இதுபோன்று பல்வேறு நோய்களை நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.