காதலில் நான்
உலகில் உள்ள ஒட்டுமொத்த
உலக அழகிகளை
ஒரு சேர
ஒருத்தியாய் படைத்து என்
கண் முன்னே உலவ வைத்தானோ பிரம்மன்
அவளை !
பல பெண்களை பார்த்தும்
பதறாத என் இதயம்
பதை பதைத்தது
பாவை அவள் என்னை நோக்கி கடை கண்
பார்வையை வீசும் போது !
நடுக்கத்தில் என் கால்கள்
அவளை விட்டு விலகி நின்றது
ஆனால்,
என் பார்வையும்
என் மனமும் அவளை சுற்றி என்றும்
வட்டமிட்டே கொண்டிருக்கிறது .......
இமை அசைவில் எனை
இழுத்து அடைத்தாய்
காதல் சிறையில்
விடுபடுவேனோ நானும் உனை காதலிக்கிறேன்
எனும் வார்த்தையை உன் வாயால்
கேட்கும்பொழுது !