ஒற்றை முடி இரகசியம்

நிலா முளைக்கும் நேரத்தில்
நீயும் நானும் சுதந்திரமாய்
சுற்றாத இடமில்லை கட்டாத தாலியுடன்

ஊர் கூட்டி அச்சதை கொட்டி
கட்டிய தாலியுடன் நானும் அவளும்
நிலா முளைக்கும் நேரத்தில்
சுற்றிய இடத்தை கண்டு
ஞாபக அசை போட
ஒற்றை இரகசிய முடி காவல்

மஞ்சளிலே குளித்து
இரும்பு உடம்பு கொண்டு
ஒரே முடியை கோசமாய் கொண்டு
வேப்பிலை ஆடை உடுத்திய குணமகள்
என் பாட்டியின் தயாரிப்பு
அந்த முடியை நான் கட்டி வந்த காரிகை
இடத்தில் ஒப்படைத்தால் என்
குடும்ப கால வாதி

காத்து கறுப்பு அடிக்குமோ
கயவர் கண் முடிக்குமா
களவாணியை தடுக்குமோ
எல்லாம் இந்த முடி பார்த்து கொள்ளும்
என மாமியார் வார்த்தையை மந்திரமாய்
நம்பி ஒற்றை முடியை இரகசியமாய்
முடியும் என் மண முடி

ஒற்றை முடி துருப்பிடித்த ஆணி
பூச்சி பிடித்த வேப்பிலை நமக்கு காவல்லா

நான் பழித்தேன்
அவள் என்னை வசைத்தால்

எழுதியவர் : கிருஷ்ணா (19-Sep-16, 4:53 pm)
சேர்த்தது : krishna puthiran
பார்வை : 144

மேலே