18-9-16 தினம் ஒரு பாட்டு இயற்கை - 38 = 227

பாலாற்றங் கரையோரம் நீராடும் பறவைகளே
ஆகாரம் உண்பதற்கு ஊர்கோலம் போறீங்களே
ஐப்பசி மழைக்காக கார்த்திகை குடை பிடிக்கும்
முழுப்பசி ஆறினால்தான் உடலுக்கு எடை பிடிக்கும்

கூட்டம் கூட்டமா வர்றீங்க; கொட்டமடித்து போறீங்க
உங்களுக்கு தடைப்போட எந்த கொம்பனுக்கு உரிமைங்க?
ஆற்று வெள்ளம் பெருகினாலும் அதன்மேல் பறப்பீங்க
பயமில்லாத பயணம் பறவைகளுக்கே சொந்தங்க..!

ஆடிமாச மேல்காத்து ஆளையே தூக்குங்க
அதற்கு அசராத ஜீவனாய் நீங்க சிரிப்பீங்க
ஓடும் மேகத்தில் ஒளிஞ்சி போவீங்க
மேகங்கள் வழிவிட நீங்க சிறகடிப்பீங்க

பறக்கும் சக்தியை இயற்கையில் பெற்றீங்க
செயற்கை முயற்சியை அறவே வெறுப்பீங்க
பூகம்பம் வருவதை முன்னறே அறிவீங்க
பேரிடர் மேலாண்மை உசாராய் ஆகுமுங்க !

காட்டு பறவையை கூட்டினில் அடைப்பது
மனிதனின் வாடிக்கை! மனித ஜென்மத்தை
மறுதளிப்பது மிருகங்களின் வாடிக்கை!

காட்சி பொருளாய் கூட்டில் இருப்பதை
காண்கிறோம் வேடிக்கை! மீட்சி என்பது
மிருகத்துக்கும் உண்டு கொள்ளட்டும் நம்பிக்கை!

வாழும் உலகில் ஐந்தும் ஆறும் ஒன்றுதான் - இறைவன்
அய்ந்தைவிட ஆறுக்கே அதிக வாய்ப்பினை தருகிறான்
வாய்ப்பு பெற்ற மனிதன் தன் வாயாலே கெடுகிறான்
வாய்ப்பளித்த இறைவனை வசதிவந்ததும் மறக்கிறான்

பறவைகளே மிருகங்களே மனிதர்களை நம்பாதீர்
உமக்கும் ஜாதிமுத்திரை குத்திடுவார் நெருங்காதீர்
மனிதர்களே மனிதர்களே மிருகவதை செய்யாதீர்
உமக்கு மறுஜென்மம் மிருகம்தான் மறக்காதீர்…!

நாட்டில் சுதந்திரம் மனிதனுக்கு மட்டும்
காட்டில் சுதந்திரம் மிருகத்துக்கு மட்டும்
நாட்டில் உள்ளோரை காட்டில் அனுமதித்துப்பார்
கால் கிரவுண்டு அரை கிரவுண்டு என விற்பனை ஜோர்...!

எழுதியவர் : சாய்மாறன் (19-Sep-16, 9:57 pm)
பார்வை : 103

மேலே