தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 67 = 228

“உன் விழியிலே என் உருவம்தான் தெரியுது
என் மனதிலே உன் நினைவுகள் மலருது”
“நிலவு காயுது
இரவு கொஞ்சுது
உறவு ஏங்குது
உறவாடி தூங்குது”


சிங்காரசிட்டு நீ கட்டிவரும் சரிகப்பட்டு
நெத்தியில குங்குமப்பொட்டு வீசுதடி வாசமிட்டு

கெட்டிமேளம் முழக்கமிட்டு மஞ்சதாலி நீ கட்டு
கட்டியதும் கட்டிலே வேர்த்துக்கொட்ட புரட்டியெடு

உன்தேக மோகத்திலே என்தாகம் தீரும்
விழியோர ராகத்திலே ஒன்றாகும் கீதம்

வரவேண்டும் என்னருகே தரவேண்டும் உன்னிதழை
இதழோடு இதழ் சேர்ந்தால் இன்பமோ ஏழுஸ்வரம் !


தேகமெங்கும் சூடேறி மோகபங்கம் போர்த்துது
சுடர்விடும் தீபம்போல் உள்ளமெங்கும் ஒளிக்குது

பொன்மாலை பொழுது அம்மானை படைக்குது
வெண்பாவை என்னை உன்னோடு சேர்க்குது

வேதாந்தம் சொல்லும்போது வேதனைகள் தீருமே

தேய்பிறை தேயும்போது வளர்பிறைக்கு வருத்தமே

எழுதியவர் : சாய்மாறன் (19-Sep-16, 10:07 pm)
பார்வை : 192

மேலே