தாய் நாட்டிற்காக உயிரை துறக்கும் நம் ராணுவ வீரர்களுக்கு ஓர் அஞ்சலி

தோழா

நான் இங்கு சுகமாய் இருக்க
நாட்டு நடப்பு கதைகள் பேசிட
என் மனைவி மக்கள் அருகில் இருந்திட
உறவும் நட்பும் என்னை சூழ்ந்திட

உன்னைப் பற்றி நானும் நினைத்திட
என் வாழ்க்கையே பொய் என்று நான் கருதிட
பிறந்த பிறப்பிற்கு நிஜமாய் வாழ்ந்திட
நீயும் வாழ்கிறாய் பெருமித வாழ்க்கையை

எல்லையில் நிற்கிறாய் தாய் நாட்டை காத்திட
உயிரை துச்சம் என்று நீ நினைத்திட
உன் வீரத்தை பார்த்து எதிரியும் ஓடிட
வெற்றி வாகை சூடி நீயும் வந்திட

நாடே உன் செய்கையை மெச்சிட
உன் மனைவி மக்கள் ஆனந்தத்தில் மிதந்திட
உன் வெற்றியை நாட்டிற்கு அர்ப்பணித்திட
ஆனந்தம் கொள்கிறோம் நாங்கள் அனைவரும் உட்பட

இருந்தும் நண்பா,

எதிரியின் தாக்குதலில் உன் உடம்பில் அடிபட
அதையும் மீறி அவன் ஊடுருவலை நீ தடுத்திட
அவனுக்கு எமனாய் நீ மாறிட
அஞ்சி ஓடுகிறான் தன் நாட்டை பார்த்திட

உன் உயிரை காப்பாற்ற சக பணியாளர் முனைந்திட
விரைந்து உன்னை முகாமில் சேர்த்திட
மருத்துவக் கூட்டம் முனைந்து செயல்பட
அனைவரையும் ஏமாற்றி பூமித்தாயிடம் நீ தஞ்சமடைய

உன் குடும்பத்தில் யாவரும் அதிர்ச்சியில் மூழ்கிட
நாட்டில் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்திட
தாய் நாட்டை காத்திட்ட பெருமையில் நீ உறங்கிட
உனக்கு வீர வணக்கம் நாங்களும் செய்திட

உன் இழப்பை ஈடு செய்ய அரசாங்கம் உதவிட
நாட்டு மக்கள் அனைவரும் அதில் பங்கு பெற
உன் அயராத உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்திட
எல்லோரும் உதவிடுவோம் உன் மக்கள் நலமாய் வாழ்ந்திட.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (19-Sep-16, 11:11 pm)
பார்வை : 47

மேலே