ஆசிட்வீச்சு

ஆசிட்வீச்சு
சாலையில் சரிந்து
கிடக்கிறது ஒரு சல்வார்
இருட்டில் நுழைந்த
குழந்தையாய் துடிக்கிறது
அந்த பெண்மையின் சத்தம் இருநூறு டெசிபலாய்
காற்றினை கிழிக்கிறது
பாவம்,அவளை சுற்றி இருந்த காதுகளில் மட்டும்
தூசி படிந்துவிட்டது
தண்ணீர் கேட்டு
தவிக்கிறது அந்த தேகம்
பாவம்,அவளை சுற்றி இருந்தவர் நெஞ்சில் மட்டும் ஈரம் மிச்சமில்லை
உறுப்புகளெல்லாம் உருகிகறது
நெருப்பிலிட்ட பிளாஸ்டிக்காய்
உஷ்ணத்தில் கருகியதில்
உடல் புகைகிறது காகிதமாய்
'வேணாம் என்னை விட்டுரு' என வெதும்பி வேண்டுகிறாள்
இரக்கமில்லாத இதயம் மறுபடியும்
வேதியல் வெப்பத்தை
வெடுக்கென வீசியது
ஆம்,இந்தியா அடிக்கடி
தரிசிக்கும் ஆசிட்டுவீச்சு தான்இது
அவள் அழகை உமிழ்ந்துகொண்டது அமிலமல்ல யாரோ புண்ணியவதி
பெற்றெடுத்த
'ஆண்' எனும் அகங்காரம்
-இராஜேந்திரன் புவன்