திருமுகப் பாசுரம் திரு ஆலவாய் உடையார் அருளிச் செய்தது

மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற(கு)
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு)
உரிமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க;
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்;
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

தெளிவுரை : மின்னலைப் போல் விளங்குகின்ற செம் பொன்னினாலும் இரத்தினங்களாலும் அமைந்த உப்பரிகைகள் நிறைந்த மதுரையிலிருக்கும் சிவனாகிய யாம் எழுதி விடுக்கும் திருமுகத்தை, பருவ காலத்து மேகம் போல் புலவர்களுக்குக் கைம்மாறு கருதாமல் கொடுக்கிறவரும் ஒளி பொருந்திய சந்திரனைப் போன்ற குடையின் கீழ் போரில் யானையைச் செலுத்துகிறவருமான சேரமான் பெருமாள் காண்க. தன்னைப் போல் நமதிடத்து அன்பனாகிய இன்னிசை யாழ்ப் பத்திரன் தன்னிடத்திற்கு வருகிறதனால், அவன் விரும்பிய வண்ணம் மிகுந்த திரவியங்களைக் கொடுத்து அனுப்புவீராக

எழுதியவர் : (21-Sep-16, 2:07 pm)
பார்வை : 309

மேலே