முகமறியா முழுமதி

முகமறியா முகநூலில்...
முதல் முதலாய் நட்பானோம்...
இருவிழியும் கண்டதில்லை...
இமை திறக்கும் உன் விழியை...
கேட்டதுண்டு பல நாளும்...
பார்த்திட தான் உன் முகத்தை...
வேண்டாமென்று தவிர்த்தாயம்மா..
தவறாய் நினைக்க வேண்டாமென்று தமிழால் சொன்னாயே....
முகில் மறைத்த நிலவிங்கே...
முழுமதியாய் விழியருகே தோன்றிட......
யாரென்று தெரியாமல்...
சில நேரம் தவித்திட....
முகமறைத்த நீ தானோ...
முகில் அலையாய் முகமுன்னே...
வார்த்தை வரவில்லை...
வானவில்லின் அழகா...
வர்ணிக்க முடியவில்லை....
விழி வாசலில் நிழலாய் உன் பிம்பம்....

எழுதியவர் : (21-Sep-16, 2:30 pm)
பார்வை : 56

மேலே