தெரிந்துவிடும்
ஜவுளிக்கடையின் பிரமாண்டம் தன் அம்மாவுடன் வந்திருந்த அனுவிற்கு பிரமிப்பாய் தெரிந்தது...
அனு உனக்கு பிடிச்ச ட்ரெஸ்ஸை எடுத்துக்கோ..நீதானே சொன்ன இந்த தீபாவளிக்கு நானே என்னோட ட்ரெஸ்ஸை செலக்ட் பண்ணிக்கிறேன்னு..அப்புறம் ஏன் இப்படி நின்னுகிட்டு இருக்க என்றார்..
ஆமாம்மா என்றவாரே தன் விருப்பத்தை தேட தொடங்கினாள்..ஒரு வெளிர் நிற கவுனை எடுத்து அம்மா இது எப்படி இருக்கு என்றாள் அனு.. உடனே அம்மா இதுவா உனக்கு பிடுச்சிருக்கு.. டிசைன் நல்லதான் இருக்கு ஆனால் கலர் கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கு என்றார்..உடனே அனு ஏம்மா பளிச்சுன்னு இருக்குற டிரஸ் எனக்கு நல்லா இருக்காதா என்றாள்...
அம்மா, "இல்ல அனு பளிச்சுன்னு இருந்தா நீ விளையாடும் போது கறை பட்டு அப்படியே வெளியிலே அசிங்கமாய் தெரியும்..அதனால் கொஞ்சம் டார்க் கலர்ல எடு, அப்பத்தான் கறை பட்டாலும் தெரியாது பாரு என்றார்,
ஏழு வயது அனு கேட்டாள், ஏம்மா கறை படுறது தப்பு இல்ல..அது வெளியே தெரிஞ்சாதான் தப்பா என்றாள்..
வெள்ளேந்தியாக, சாதாரணமாக கேட்ட அனுவின் கேள்வி ஆசிரியரான அவள் அம்மாவிற்கு வேறு எதயோ உணர வைப்பதாய் இருந்தது.குற்றங்களும், கறைகளும் சாதாரணமாய் உருவாக்கிவிடப்படுகின்றன, ஆனால் அவை அசாதாரணமாய் மறைக்கப்படுகின்றன பல கரிய உள்ளங்களில்..