இது ஒரு பாஞ்சாலி சபதம்
சாக்கடைக்கு ஊற்றி
சுத்தம் செய்யும் அமிலம்
பாவி அதை என் மீது
வீசி விட்டு ஓடிவிட்டானே
என்னை என் முகத்தை
உரு தெரியாமல் மாற்றிவிட்டு
என் வாழ்வை சாக்கடைபோல் ஆக்கிவிட்டு
ஓடிவிட்டான் பாவி
நான் செய்த பாவம் என்ன
அவனிடம் எனக்கு காதல் இல்லை
என்று சொன்னது தானோ
கடவுளே நீ தான் இதற்கு
பதில் சொல்ல வேண்டும்
இன்னும் நான் வாழ்ந்து
என்ன பயன் என்று எண்ணி
மாய்ந்தால் நான் கோழை
வாழ்ந்தே தீருவேன்
ஒரு நாள் அவனைக் கண்டிடுவேன்
என் வஞ்சம் தீரும் அன்று
இதுவே இந்த பாஞ்சாலி சபதம்