கண்ணுக்குள் அவள் மழை

குழந்தைப் பருவ அழுகையில் ,
தாயின் முத்தத்தைக் முகர்ந்தேன் ...
சிறு வயதில் அழுகையில்,
கண்ணீரின் சுவையை உணர்ந்தேன்...
நண்பன் பிரிகை அழுகையில்,
அன்பின் சுவாசத்தை பார்த்தேன் ....
தந்தை மரணத்தின் அழுகையில் ,
கடவுளின் விளையாட்டை கண்டேன் ...
தாயின் பாச அழுகையில் ,
மனிதப் பிறவியின் மேன்மையை தரிசித்தேன் ...
ஆனால்,
காதலி பிரிவின் அழுகையில்,
இதயத்தின் வலியை உணர்ந்தேன்.....முதன் முதலாக ! ரணம் ரணமாக !

எழுதியவர் : பாரதி பறவை (23-Sep-16, 4:14 pm)
பார்வை : 402

மேலே