தந்தை
தந்தை :-
============
கவிதை என்றால் 'தை, தை" என்று குதிப்பாள் அம்மா !!
கவிதையை 'தா, தா" என்று படிப்பார் அப்பா !!!
கருத்துகளை குவித்து என்னை வளர்த்த தந்தை
கருகும் சிறகுகளாய் இன்று மருத்துவமணையில் !!!
கண்ணீருக்கும் குறைவு இல்லை
கருகிய மனமாய் நான் !!
கற்பனைகளை வளர்த்தவர் சிதைகிறார்
கண் முன்னே... செய்வது அறியேனே !!!
பணம் இல்லா போதிலும் எனக்கு
பண்பு தந்தவர் அவர் !!!
பாசங்கள் தனது பனி மகளாய்
பந்தங்கள் போற்றிட வளர்த்தாரே !!
வேதனைகளை உள்வாங்க முடியாமல்
வெதும்பி வாழ்கிறேன் நான் !
வெறுக்கும் மருந்துகள் கொடுத்து
விம்மி விம்மி அழ வைக்கும் அரக்கி நான் !!
என் சோகம் என்னோடு தான்
என் சுகங்கள் அவரால் மட்டுமே !!!
என் சுமை என அவர் நினைக்கிறாரே
என் மனம் துகள் துகளாய் !!
தாயை பறித்தாய் சிவனே !
தாலியை பறித்தாய் நீயே !!!
தயங்கி தயங்கிதுயர கடலில்
தத்தளிக்கையில் தந்தையுமா
தேவை உனக்கு?? அராஜகம் ....
தயவு காட்டுவாயா எனக்கு?
*********** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
(என் தந்தையின் (கி. ராமச்சந்திரன் ஐயர் என்ற சந்துரு) மரணப் படுக்கையைக் காண சகிக்காமல் ஜூன் 2, நான் எழுதியது)