மழலையாய் கண்ணன்

மழலையாய் கண்ணன் :-
=====================

மயக்கும் சொப்பு இதழ்களால்
மயங்கி நிற்கிறேன் நானே !
மழலை செல்வம் சிரிக்கக் கண்டால்
மனமே உருகி பனி நீராய் !!

மா, மா என்று அழைக்கைகயிலே
மனமும் குழையுதே கண்ணா !!
மங்கும் மாலை வேளையிலே
மதியும் கிறங்குதே தானா !!!

மாதவம் செய்தேனா நானும்
மகனாய் உன்னை அடைய
மறக்க செய்கிறாயே சோகங்களை
மனமெல்லாம் நீயே கண்ணா !!

மாதவன் உன்னை சரணடைந்தேன்
மாதவமே செய்தவள் இல்லை அல்லவா?
மாதவன் உனக்கு தெரியாதா ?
மாதெனக்கு என்ன தேவை என்று ?

மன்னாவா உன் கையில் நூல்
மாது நான் நீ ஆட்டும் பொம்மை
மாதினை நிற்க வைப்பதும்
மாதினை சரியாய் வைப்பதும் நீயே !!!

மது சூதனனை சரணம் அடைந்தேன்
மறவாது இருக்கட்டும் நெஞ்சம் உன்னை
மறைபொருளே வேதியனே அருள்
மழை பொழியேன் கண்ணா !



************ ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)

எழுதியவர் : ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு) (24-Sep-16, 3:09 pm)
Tanglish : mazhalaiyaay Kannan
பார்வை : 98

மேலே