உயர உயர

உயர உயர
~~~~~~~~~~~
உயர பறக்க நினைக்கும்போது
உள்ளம் துள்ளுதே !!
உயர உயர உள்ளம் நீலவானம்
உள்ளில் போகுதே !!

வேதனைகளை துறக்க மனம்
விரும்பி நிற்குதே !
வாதனைகளை மறக்க மனம்
வாதாடி நிற்குதே !!

வற்புறுத்தல்களால் மனம்
வதங்கி நிற்குதே !
வாதங்கள் செய்யும்போது
வருடலாகுதே !!!

சிறகுகள் உடைந்து போனாலும்
சிந்தனை சீராகுதே !!
சிற்ப மது உடைக்கப்பட்டாலும்
சீராக நிற்குதே !!

மாறுகின்ற உலகமதில்
மாறா நேர்மை நான் !
மயக்க முயற்சிக்கும்
மாயையை வெல்வேனே !!

********* ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)

எழுதியவர் : ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு) (24-Sep-16, 2:56 pm)
Tanglish : uyara uyara
பார்வை : 266

சிறந்த கவிதைகள்

மேலே