நீதியைத் தேடி

ரத்தம் கொத்திக்குதே !
நெஞ்சம் கனக்குதே !
நீதி, நேர்மை, நியாயம் ;
நிலத்தடி மண்ணாய் போனதால் !
பாதகம் செய்தோர் பல்லிளிக்க ;
பாதிக்கப்பட்டோர் பாதாளக்குழியிலே !
கண்ணிருந்தும் குருடர்களானோம் !
காதிருந்தும் செவிடர்களானோம் !
வறுமை கோர்ட்டில் இருந்துவிட்டால் ;
வழக்கும் கூட தேடிவரும் !
தட்டிக்கேட்கவும் நாதி இல்லை !
நடுத்தர வர்க்கம் என்பதாலே !
நல்லவனாய் இருந்தால் போதும் !
நடுநிசியும் நரகமாய் மாறும் !
காக்கி உடுப்பும் ,கருப்பு உடுப்பும் -
காசுக்கு மட்டுமே கண்திறக்கும் !
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ;
கடைவீதியின் குப்பைகளானதே !
நீதி தேடி அலைவதால் நிம்மதியுண்டா ?
நீதி கிடைக்க நித்தம் ஓர் அம்பத்கார் -
நிலத்தில் உதிக்காது போனால் ;
நீதி என்பதும் நிலத்தடி நீரே !