பாடம்

கடந்து வந்த பாதையை
கணநேரம் யோசித்தேன்
காலம் கற்றுத் தந்த பாடங்கள்
எனக்கு மட்டும் அநுபவமாய் சரி
மற்றவர்களுக்கு பாடமாய்
இருக்கட்டும் என்றே
என் அநுபவத்தை கற்பிக்க
படிக்கமட்டும் செய்துவிட்டு
அநுபவத்திற்கு தன்னை
தயார் படுத்திக் கொண்டனர்
என்னைப் போலவே!
படித்தோர் எல்லாம்
விதிவிலக்கா என்ன?
: #sof. #சேகர்