நலம், நலமறிய ஆவல்

உறவுப் பாலமாய் - உயிர்
நட்பின் பூபாளமாய்,
பாசப் பிரதிபளிப்பாய் - உயர்
நேசப் பிணைப்பாய்,

காதல் தூதுவனாய் அவர்தம்
சாதல் சாசனமாய்,
உள்ளக்குமுறலாய்,
உணர்ச்சி வெளிப்பாடாய்,

உலகமெங்கும்
உலாவந்த கடிதங்கள்
தபால்காரர் வருகைக்கு
தவமிருந்த காலங்கள் .

அவசர அவசரமாய்
பிரித்து, படித்து,
மகிழ்ந்ததும், அழுததும்,
நினைவலைகளாய்
நெஞ்சினிலே.

நினைவலைகளை
கலைத்தது
அலைபேசி அழைப்பு பாடல்.
"நலம் நலமறிய ஆவல்"

எழுதியவர் : ப. சொக்கலிங்கம் (25-Sep-16, 2:25 pm)
சேர்த்தது : ப சொக்கலிங்கம்
பார்வை : 273

மேலே