102K இல் ஓரு பயணம்
சோழிங்கல்லோர் போகுமா?
தடுமாறி தமிழ் பேசும் வட இந்திய பெண்
'சில்லறையா கொடுங்க' !- நடத்துனர்
'திங்கட்கிழமை ஆனாலே டிராபிக் தான்' !- இது ஓட்டுனர்
வார இறுதி கொண்டாட்ட அலுப்பில்
அயர்ந்து தூங்கிய கல்லூரி மாணவன்
காதுகளில் இசை ஒலிக்க
ரசித்து கொண்டிருந்த ஜன்னல் ஓர பெண்கள்
'ஆபிஸ் போயிட்டியா? சாப்பிட்டியா?'
ஃபோனில் சிணுங்க தொடங்கிய இளம்பெண்
ஃபோன் போட்டா கால் போமாட்டகுதுமா?ரிப்பேரா னு பாரேன்
TCS அடையாள அட்டை அணிந்த பெண்ணிடம்
KT வாங்கி கொண்டிருந்த நடுத்தர வயதுப்பெண்
வெளியே நடக்கும் சண்டையை அலட்டிக்கொள்ளாமல்
வேகமாய் பாரிமுனையில் தான் வாங்கி வந்த
மல்லி மொட்டுக்களை தொடுத்து கொண்டிருந்த மூதாட்டி
வீணையை மீட்டும் விரல்களாய்
அவளுக்கு மட்டுமே தெரிந்த மெட்டிற்கு விரல்கள் நடனமாடி கொண்டிருந்தன
வழக்கம்போல் மனித மனங்களின் இயல்புகளை
கவனித்து கொண்டிருந்த நான்
'இந்த பொண்ணு என்ன திரும்பி திரும்பி பாக்குது'
இது என்னருகில் இருந்தவரின் எண்ணம்
பேருந்து வேகமெடுக்க தொடங்கியது - ஏனோ !
இந்த பயணம் வார்த்தையாய் வடிவெடுத்தது.