நட்பில் காதல்

புண்ணாய் கிடந்த மனதை
பூக்கச் செய்தவள் நீதானே!

தனிமையை தேடிய என்னை அன்பில்
தத்தளிக்க செய்தவள் நீதானே!

உன் ஈா்ப்பு விசை பாா்வையால் என்னை
ஆப்பிலைப் போல் இழுத்தவள் நீதானே!

உன்னைக் காண என் பாா்வையை
360° சுழலச் செய்தவளும் நீதானே!

உன்னிடத்தில் என்னைப்
பறி கொடுத்தேனே
என்னிடத்தில் உன்னை
பறிமாறிக் கொண்டேனே!

எழுதியவர் : (26-Sep-16, 7:42 pm)
Tanglish : natpil kaadhal
பார்வை : 289

மேலே