நட்பே அந்தமும் ஆதியும்

நட்பே அந்தமும் ஆதியும்
*****************************
சங்கீதம் மொழியாகும் சகியின் அன்பில்
அன்பில் அவளுக்கு இணை வானம்
வானம் வசப்படும் என்னருகில் அவளிருந்தால்
அவளிருந்தால் சோகம் ஏது வாழ்க்கையில்
வாழ்க்கையில் கிடைத்த வரம் அவள்
அவள் எப்பொழுதும்
வாழ வேண்டும் மகிழ்ச்சியாக.....
மகிழ்ச்சியாக வாழவேண்டும் நூறாண்டு காலம் அவள்
அவள் ஆள வேண்டும் உலகம்
உலகம் ஆனவள் காண வேண்டும் கடைசியாக
கடைசியாக வேண்டும் அவள் மடியில் முடிவும்
முடிவும் முதலும் உயிரும் என்னவள்
என்னவள் கீதம் காற்றாகட்டும் நாளும்
நாளும் அதை கேட்டு வாழ்வேன்
வாழ்வேன் அவள் நினைவோடும் கனவோடும்
கனவோடும் கனநேரமும்
அவளின் நினைவுகள்
நினைவுகள் மிதக்கும் நட்பெனும் மனதில்
மனதில் இருந்து நீங்காது அவள் ஞாபகம்
ஞாபகம் சிறகு முளைக்கும் மீண்டும்
மீண்டும் அவளை காணும் நிமிடம்
நிமிடம் நின்று போகட்டும் அந்நொடியில்
என் சகிக்கு சமர்பணம்
~ உன் சகோதரி பிரபாவதி வீரமுத்து