பில்லுகுல்லு

வாடி தாமரை, நல்லா இருக்கறயா? வீட்டிலே .....
@@@@@@@
வீட்டிலே எல்லாரும் நல்லா இருக்கறோம். நா உங்க வீட்டுக்கு வர்ற போது கடசி வீட்டில இருக்கற பாட்டி 'பில்லுகுல்லு'-ன்னு சத்தமா பல தடவ சொல்லிட்டு இருந்தாங்க. அவுங்க மனநிலை பாதிக்கப்பட்டவங்களா?
@@@@@@
அடியே தாமரை, அவங்க எந் தோழி தேன்மொழியோட பாட்டிடி. அவுங்க ரொம்ப நல்லவங்க. வயசு தொண்ணூறு. அவுங்க கொள்ளுப்பேரன் பேரு பில்குல் . அவனுக்கு வயசு நாலு ஆகுது. குறும்புக்காரன். அவனத்தான் அந்த பாட்டி கூப்பிட்டிருப்பாங்க.
@@@@@@
சரிடி வள்ளி, அதென்ன பில்குல்-ன்னு பேரு வச்சிருக்காங்க.
@@@@@@@@
நா எந் தோழி தேன்மொழிகிட்டயே அதப்பத்திக் கேட்டன். அவ சொன்னா:" அக்கா நம்ம சினிமா நடிகருங்க நடிகைங்க ஒருத்தோரட பேருகூட தமிழ்ப் பேரு இல்ல. அரசியல் தலைவருங்க அவுங்க பிள்ளைங்க, பெரிய படிப்புப் படிச்ச தமிழருங்கெல்லாம் அவுங்க பிள்ளைங்களுக்கெல்லாம் இந்திப் பேரத்தானே வச்சிருக்காங்க. நா எட்டாம் வகுப்பு படிச்சவதானே. நா மட்டும் எம் பையனுக்கு தமிழ்ப் பேரையா வைக்கமுடியும்?" னுகேட்டா.
@@@#@
அப்பறம்?
@@@@
நா அவளக் கேட்டேன்:"உம் பையனுக்கு யாரு பில்குல்-ன்னு பேரு வச்சது?"
அவ சொன்னா: அக்கா நாந்தாக்கா அந்தப் பேர வச்சேன். எம் புருசன் ஒம்தாம் வகுப்பு வரை படிச்சவரு. தச்சு வேல கத்துட்டு துபாய்ல வேலைல இருக்கறாரு. வருசத்து ஒரு தடவதான் ஒரு மாச விடுமுறையில வருவாரு. பில்குல் பொறக்கறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே " பொறக்கப் போற கொழந்தைக்கு நீங்களே ஒரு பேரச் சொல்லுங்க"ன்னு கேட்டென். "பொறக்கறது ஆணோ பொண்ணோ உனக்குப் பிடிச்ச இந்திப் பேரை வச்சிரு"ன்னாரக்கா. நா அடிக்கடி இந்தித் தொடர்களப் பாக்கற பழக்கம் உள்ளவ. எல்லாத் தொடர்கள்லயும் "பில்குல்"ங்கற வார்த்தயச் சொல்லுவாங்க. பில்குல் எம் மனசில பதிஞ்சிருச்சு. அதையே எம் பையனுக்குப் பேரா வச்சிடங்க்கா".
@@@@@
ஏன்டி அழகி உந்தோழிக்கு அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?
@@@@@
ஏன்டி தாமரை, தெருவுக்கு ரண்டு லதா (கொடி), ரண்டு ஸ்வேதா ( வெளுத்தவள், வெள்ளச்சி) ரண்டு ஹேமா (தங்கமானவள்) இருக்கறாங்க. அவுங்க பெற்றோர்கள் பலருக்கு அந்தப் பேருங்களோட அர்த்தம் எல்லாம் தெரியாது. அது மாதிரிதான் தேன்மொழியும் அவ பையனுக்கு பில்குல்-ன்னு பேரு வச்சுருப்பா. எந்தப் பேரா இருந்தா என்ன? இந்திப் பேரா இருந்தாப் போதும். அதான் தற்கால தமிழரோட பண்பாடு.
@@@@
ஆமாண்டி அழகி. நீ சொல்லறதுஞ் சரிதான்டி.
@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் நாட்டில் இரண்டு மூன்று தலைமுறையாக பல இந்திக்காரர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட தன் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டியிருக்கமாட்டார். தமிழர்களின் இந்திப் பெயர் வெறித்தன மோகத்தைச் சுட்டிக்காட்டவே மேலே நீங்கள் வாசித்த தகவல்.
@@@@@@@@@@####
நகைக்க அல்ல. தமிழ்ப் பற்றை வளர்க்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@
பில்குல் = முழுமையான, தெளிவான, ஏதாவது, எல்லாம், குறையில்லாமல் ஆக்கப்பட்ட.

எழுதியவர் : மலர் (26-Sep-16, 11:38 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 181

மேலே