பச்சை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

பச்சை விநாயகனைப் பார்த்து வணங்கிடவே
இச்சையோடு நானெழுந்(து) அங்குசெல்ல - அச்சமேதும்
தேவையில்லை; நாயகனும் தோள்கொடுப்பான்; நாளெல்லாம்
பூவைத்தே போற்றி வணங்கு! 1

பச்சை விநாயகன் பார்வையுன்மேல் பட்டிட
இச்சைகொண்டு என்றுமவன் பேர்புகழை - வச்சிரம்போல்
நித்தநித்தம் நற்றமிழில் நித்திலம் நீயென்றே
உத்தமனைப் பாடு மகிழ்ந்து! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-16, 10:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

மேலே