தூண்டுகோல்
மனவானில் கோட்டைக் கட்டியும்
நிஜவாழ்வில் நீரில் வரைந்தும்
மணற்பரப்பில் வீடு அமைத்தும்
விரும்பி விழிகளை திறந்தால்
எதிரே தெரிவது வெட்டவெளியே !
தத்துவம் அல்ல சொன்னவை
தத்ரூபம் தான் நடைமுறையில் !
செய்திடும் காரியம் எதற்குமே
துணை நிற்கும் எண்ணந்தான்
தூண்டுகோல் ஆகும் வாழ்விலே !
தூண்டிடும் நிலையில் இருப்பது
வேண்டிடும் பொருள் மட்டுமன்று !
தூவிடும் வித்தாக நெஞ்சத்திலே
தூண்டி விடுகின்ற செயல்களை
முடித்திட காரணமாய் உள்ளவரும் !
விளக்கேற்றத் தேவை தீக்குச்சியே
சுடர்விட்டு எரிந்திட தூண்டுகோல் !
குலவிளக்கு மங்கிடாது ஒளிர்ந்திட
குணங்களே தூண்டிடும் மனதிற்கு
தூண்டுகோல் ஆகிறது எவருக்கும் !
இதயங்கள் ஒன்றிட தூண்டுகோல்
மலர்ந்திடும் காதலே மண்ணிலே !
சந்திக்கும் தோல்வி தூண்டுகோல்
வழிகாட்டும் வெற்றிப் பாதைக்கு !
தூண்டுகோல் துணையே வாழ்விற்கு !
பழனி குமார்