வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே
==============================ருத்ரா இ பரமசிவன்


வாழ்க்கை என்பது
முருக்க மரத்து வேதாளம் என்று
வெட்டி வெட்டி எறிந்தாலும்
நம் தோள்மீது அது
ஏறிக்கொண்டே தான் இருக்கும்.
வாழ்க்கையை வெறுப்பது தான்
அந்த வேதாளம்.
வாழ்க்கையை நோக்கி
வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு
எந்த வேதாளங்களும்
அணுக முடியாமல்
ஓடியே போய்விடும்.

====================================

எழுதியவர் : ருத்ரா (27-Sep-16, 11:58 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 193

மேலே