பல விகற்ப பஃறொடை வெண்பா சீறிவரு மாகாய கங்கையின் சீற்றம்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
சீறிவரு மாகாய கங்கையின் சீற்றம்
அடக்கி பரமன் சிரசில் முடிய
சினத்த உமையாள் முனுமுனு கேட்டு
இதபீ டமுனதெனக் கூறி யுடலினில்
பாதி உமையவள்க் கீந்து உலகுயிர்
காக்க விடமும் குடித்த சிவனைத்
தொழுவார்க் கிலையே பவம்
27-09-2016