தந்தையின் கண்ணீர்

நேசத்தின் நிழலாய்
பத்து மாதம் சுமந்தாள் தாய்!
நேசத்தின் நிஜமாய்
காலமெல்லாம் நெஞ்சத்தில் சுமந்தார் தந்தை!
முதல் அடி பிள்ளை நடக்கையிலே
முழு நிலவை தொட்டவர்
தோள் மேலும் மார் மேலும்
மிதிக்க வைத்து ரசித்தவர்
நித்தம் நித்தம் ரசித்து வாழ
வியர்வை ரத்தம் சிந்தியவர்
இன்னும் ஆயிரம் ஆயிரம்
அவரைப் பற்றி....
ஆனால்
தலை குனிந்து கண்ணீர் விடுகிறார்
உருவாக்கிய உயிர் உதாசீனப் படுத்தியதால் !
உயிர் உருகி
நெஞ்சம் சிதைந்து நின்றாலும்
கடைசிக் கண்ணீர்
வற்றிவிட
கடைசி வார்த்தை தன் உயிருக்கு
'' எங்க இருந்தாலும் நல்லாருக்கட்டும்''