விவசாயம்

செயற்கை அரிதாரம்

பூசுவதில்லை

நாங்கள்,

இப்புவி என்ற

நாடகமேடையில்,

நாங்களும்

நடிகர்களே

ஏற்றிருப்பதோ

விவசாய பாத்திரம்

திறம்பட நடிக்கத்

தவறினால்

இப்புவியில் மற்ற

பாத்திரங்கள்

நிரம்புவது

கேள்விக்குறியாகிப்

போகும். #sof #சேகர்

எழுதியவர் : #Sof #sekar (28-Sep-16, 10:50 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vivasaayam
பார்வை : 203

மேலே