பூக்களின் போராட்டம்

அமைதியாக பூத்துச்
சிரித்திருந்த மலர்த் தோட்டத்தில்
புயலொன்று ஆவேசமாக வீசி
ஆர்ப்பாட்டம் செய்ய
போராடிய மலர்கள்
தோற்று
செடியும் கொடியும் விட்டு
மலர்ந்தும் மலராத பூக்களாய்
மொட்டுக்களாய் முழுதும் மலர்ந்த
மலரிதழ்களாய்
தோட்டம் எங்கும் சிதறிக் கிடந்தன !
போதுமா உன் ஆவேசம் ஆர்ப்பாட்டம்
மலர்களை நாசம் செய்து சின்னா பின்னமாக்கும்
உன் சரித்திர வெறி அடங்கியதா
என்று சினந்து கேட்டது மலர்கள் !
அன்று ஆதிக்கப் போர் வெறிகொண்டு
பின் அமைதி கொண்டு புத்தம் தழுவிய
சாம்ராட் அசோகன் போல்
அமைதியுற்று தென்றலாய்
மலர்க் கொடிகளைத் தழுவியது புயல் !
----கவின் சாரலன்