வார்த்தையை உடைத்து உடைத்துப் போட்டால் கவிதையாகுமா
முரசொலியில் 'வித்தகக் கவிஞர்' பா.விஜய் எழுதும் 'கலைஞரின் பயணம்' என்ற கவிதைத் தொடர். ஒரு சாம்பிள்:
முதலமைச்சர் பொறுப்பேற்றதும்
முதல் முறையாக
பிரதமரையும்
மத்திய அமைச்சர்களையும்
மாநிலத்தின் நிலை குறித்துப்
பேசுவதற்குத் தயாரானது
கலைஞரின் பயணம்'
வார்த்தையை உடைத்து உடைத்துப் போட்டால் கவிதையாகுமா என்று மனம் கொத்திப் பறவை என்ற கட்டுரையில் சாரு நிவேதிதா வருத்தப்படுகிறார்.
ஆதாரம்: ஆனந்த விகடன், 03.11.2010
இப்படித்தான் இன்றைய புதுக்கவிதைகள் பல இருக்கின்றன.