காதல்
குளிர்கால வெயிலாக
மழைகால மேகமாய்
வந்தவளே!
உன் காந்த பார்வையில்
என்னை உன் மார்பில்
சாய்த்தவளே!
வானவில்லை எடுத்து
உடையணிந்து
வந்தவளே!
பிரமன் என்னை
காதல் செய்ய தூண்டும்
அழகிய பேதையே!
உன் அழகை வர்ணிக்கும் போது
எழுத்திற்கு முக்கனி சுவை
கொடுத்தவளே!
உன் இதழில் இளநீர் பால் தேன்
பெற்றவளே!
உன் விழியில் குற்றால அருவியாய்
காதல் வடிவிட்டவளே!
என் உயிர் உன்னிடம்...
பார்த்துக்கொள் பாதுகாப்பாக...