மனையாள்
எத்தனை இரவுகள்
என் தனிமைக்கு துணைநிற்கும்
என் இனியாளே!
எத்தனை கனவுகள் - நம்
காதலின் கோட்டைக்கு
காவல் நிற்கும்
என் இல்லாளே!
ஆயிரம் செங்காந்தளை
அரைத்து பூசிய
கமல வதனத்தை காணாது
கண்கள் கலங்குதடி
என் கவியாளே!
நரம்பை நாணேற்றி - அதை
நாசியில் கொடியேற்றி
கொடிமுல்லை உனையேற்றி
கொண்டாடியவனை கொள்வாயோ
என் கொடியாளே!
கோமகள் கொஞ்சும்
கோதையின் நெஞ்சம்
கோபத்தை குறைத்து
கோமானை கொஞ்ச வருவாயோ
என் உமையாளே!
மார்கழி மாதத்து
மலராளே
மாதவன் மயிலிறகின்
மரகதமே மணவாழ்க்கையை எண்ணி காத்திருக்கிறேன்
என் மனையாளே!